மாதாந்தக் கருத்தரங்கு – ஏப்ரல் 2026

அன்புடையீர்,

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: திரு. அரியராசா முத்தையா, முதுகலைத் தமிழ்

தொல்காப்பிய உருபன் கோட்பாடுகள்
Morphological theories of Tolkappiyam

பேராசிரியர் வளனறிவு
முன்னைத்தலைவர், தமிழாய்வுத்துறை
தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு.

தொல்காப்பியரின் அகப்பொருள் மரபில் திருக்குறள்
திருமதி சம்மு இரவி
முதுகலைத் தமிழ், தமிழ்ப் பல்கலைக்கழகம், அமெரிக்கா

தொல்காப்பியத்தின் சிறப்பு
செல்வி யஸ்வினி சிவாகரன்
சின்கிளேயர் மேல்நிலைப் பள்ளி, டுறாம், கனடா

நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

காலம்:
கனடா: சனிக்கிழமை, ஏப்ரல் 11, 2026 மாலை 7.00 முதல் 09:00 வரை
இந்தியா/இலங்கை: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026 காலை 5.30 முதல் 7.30 வரை

Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09&omn=84627905302
              Meeting ID: 361 993 2434
              Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

You may also like...