மாதாந்தக் கருத்தரங்கு – மே 2026

அன்புடையீர்,

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2026ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: திருமதி புவனா கருணாகரன், முதுகலைத் தமிழ்

தொல்காப்பியம் என்னும் ஆதி மெய்யியல்
பாமயன் (மு. பாலசுப்பிரமணியன்)
பேச்சாளர், எழுத்தாளர், பயிற்றுநர், செயற்பாட்டாளர் மற்றும் இயற்கைவழி உழவர், தமிழ்நாடு

நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

காலம்:
கனடா: சனிக்கிழமை, மே 23, 2026 மாலை 7.00 முதல் 09:00 வரை
இந்தியா/இலங்கை: ஞாயிற்றுக்கிழமை, மே 24, 2026 காலை 5.30 முதல் 7.30 வரை

Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09&omn=84627905302
              Meeting ID: 361 993 2434
              Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

You may also like...