சிறுவர்க்கான தொல்காப்பியம் – இணையவழிக் கல்வி – 2ஆம் குழாம்

பெற்றோர்களே! ஆசிரியர்களே! மாணவர்களே! வணக்கம்.

தொல்காப்பியத்தினை இளைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் பணியில், கனடாத் தொல்காப்பிய மன்றம் நடத்தும் “சிறுவர்க்கான தொல்காப்பியம்” எனும் இணையவழிச் (Online) சான்றிதழ்ப் படிப்பின் (Certificate Course) இரண்டாவது குழாம் (2nd batch) வரும் மே மாதம் தொடங்க இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

மே 14, 2026 முதல் ஓகஸ்ற் 06, 2026 வரை மொத்தம் 12 வகுப்புகள் வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு 8.00 முதல் 9.00 மணி வரை இணையவழியில் இடம்பெறும்.

வகுப்பில் இணைவதற்கான தகைமை: 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை

கட்டணம்: $12 மட்டுமே

பதிவு செய்ய: https://forms.gle/BGqgtzRsGrKSZrN46

பதிவு செய்யக் கடைசி நாள்: 01-மே-2026, வெள்ளிக்கிழமை

தேர்வில் சித்தியடைவோருக்கான சான்றிதழ் 2ஆம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் வழங்கப்படும்.

You may also like...