மாதாந்தக் கருத்தரங்கு – பெப்ரவரி 2026

அன்புடையீர்,

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: திருமதி சசிகலா ஜீவானந்தன், முதுகலைத் தமிழ்

தொல்காப்பிய உரைகளின் சிந்தனைப் பின்புலம்
– முனைவர் அ. சதீஷ்
இணைப் பேராசிரியர், தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புலம்
பொறுப்பாளர், தொல்காப்பியர் ஆய்வு இருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, இந்தியா.

திருக்குறள் உரையாடல்
செல்வி அனுஷ்க்கா பிரதீபன்
8ஆம் வகுப்பு, தோமஸ்வெல் பள்ளி, கனடா.
மற்றும்
செல்வன் ஶ்ரீபுஜன் பாலசுப்ரமணியசர்மா
6ஆம் வகுப்பு, சிக்ஸ்டீன்த் அவன்யு பள்ளி, கனடா.

நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

காலம்:
கனடா: சனிக்கிழமை, பெப்ரவரி 14, 2026 மாலை 7.00 முதல் 09:00 வரை
இந்தியா/இலங்கை: ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 15, 2026 காலை 5.30 முதல் 7.30 வரை

Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09&omn=84627905302
              Meeting ID: 361 993 2434
              Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

You may also like...