மாதாந்தக் கருத்தரங்கு – ஓகஸ்ற் 2026
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2026ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)
நெறியாளர்: திருமதி வாணிசிறி சிவபாதசுந்தரம், முதுகலை தமிழ்
தொல்காப்பியமும் செயற்கை நுண்ணறிவும்
முனைவர் ம. ஏ. கிருட்டினகுமார்
தமிழ்ப்பேராசிரியர், காஞ்சிமாமுனிவர் அரசினர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
தொல்காப்பியத்தில் மொழிமரபு
செல்வி டிவ்யஸ்ரி மயுரேசன்
10ஆம் வகுப்பு, மிடில் பீல்ட் உயர்பாடசாலை, ஸ்காபரோ
தொல்காப்பியம்
செல்வி ஸ்ருதிஹா வேணுதாஸ்
5ஆம் வகுப்பு, பென்டேல் ஜூனியர் பொதுநிலைப் பாடசாலை, மார்க்கம்
நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
காலம்:
கனடா: சனிக்கிழமை, ஓகஸ்ற் 15, 2026 மாலை 7.00 முதல் 09:00 வரை
இந்தியா/இலங்கை: ஞாயிற்றுக்கிழமை, ஓகஸ்ற் 16, 2026 காலை 4.30 முதல் 6.30 வரை
Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09&omn=84627905302
Meeting ID: 361 993 2434
Passcode: tamil
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.




