மாணவர் பாசறை நிருவாகக் குழு தெரிவிற்கான கூட்டம்
அன்புடையீர் வணக்கம்!
தொல்காப்பிய மன்றத்தின் ஒரு பகுதியாக மாணவர் பாசறை உருவாக்கப்பட்டதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். மாணவர் பாசறையின் மாணவ நிருவாகக் குழுப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் 19 சனவரி 2026 (திங்கள் கிழமை) அன்று இரவு 8 மணிக்கு இணையவழியாக (Zoom) நடைபெறவுள்ளது.
காலம்: திங்கட்கிழமை, சனவரி 19, 2026 மாலை 8.00 முதல் 09:00 வரை
Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09&omn=84627905302
Meeting ID: 361 993 2434
Passcode: tamil
நிருவாகச் சபைக்கான கட்டமைப்பு பின்வருமாறு.
இயக்குநர் (Director)
பேராசிரியர் இல. சுந்தரம்
ஒருங்கிணைப்பாளர் (Coordinator)
ஆசிரியர் மாகிறேற் பவுலஸ்
வகுப்புகளுக்கான பொறுப்பாசிரியர்கள் (Teacher In-charge) – 8 பேர்
1) வகுப்பு-06: ஆசிரியர் சுவந்தி சங்கர்
2) வகுப்பு-07: ஆசிரியர் சசிகலா ஜீவானந்தன்
3) வகுப்பு-08: ஆசிரியர் வாசுகி நகுலராஜா
4) வகுப்பு-09: ஆசிரியர் வாணிஸ்ரீ சிவபாதசுந்தரம்
5) வகுப்பு-10: ஆசிரியர் தமயந்தி பிறேம்ராஜ்
6) வகுப்பு-11: ஆசிரியர் ஜெயதீபா தனபாலசிங்கம்
7) வகுப்பு-12: ஆசிரியர் ஜோதி ஜெயக்குமார்
8) பல்கலைக்கழகம்: ஆசிரியர் இராச்குமார் குணரட்னம்
தெரிவு செய்யப்படும் மாணவ நிருவாகக் குழு
அமைப்பாளர் (Convenor) – 8 பேர்
துணை அமைப்பாளர் (Assistant Convenor) – 8 பேர்
மாணவ அமைப்பாளர்கள் 16 பேரில் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு ஆண் ஒரு பெண் என இரு பாலினத்தவரும் சமமாக இடம்பெறுவர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாணவர் பாசறையின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாணவர்கள் இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு 5ஆண்டுகளுக்கான உறுப்பினர் கட்டணம் $10 செலுத்தி https://forms.gle/gGRcwRaJecKotGjr5 மாணவர் பாசறையில் உறுப்பினராக வேண்டும். உறுப்பினர்கள் (Members) மட்டுமே நிருவாகக் குழுவில் இடம்பெற முடியும்.
தேர்வுசெய்யப்படும் 16 நிருவாகக் குழு உறுப்பினர்கள் 2026 செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக் குழுவில் இடம்பெறுவர்.
தொல்காப்பியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதோடு தமிழ்வழி மாணவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சியையும் வழங்குவோம் வாரீர்!
நன்றி.



