மாதாந்தக் கருத்தரங்கு – சூலை 2026
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2026ஆம் ஆண்டு சூலை மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)
நெறியாளர்: அரியராசா முத்தையா, முதுகலை தமிழ், தஞ்சைப் பல்கலைக்கழகம்
தொல்காப்பியத்தில் கல்விச் சிந்தனைகள்: பண்டைய தமிழறிவும் எதிர்காலக் கல்வியும்
முனைவர் சுதர்ஷினி மணிமொழி
விரிவுரையாளர், ஆசிரியர் கல்வித் துறை, இலங்கைத் தேசியக் கல்வி நிறுவகம் (NIE)
தமிழ் தொன்மையான மொழி
செல்வி ரிஷ்மிகா பிரதீப்ராஜ்
1ஆம் வகுப்பு, ஆர். எப். டௌனி பொதுநிலைப் பாடசாலை, பீட்டபரோ
செம்மொழியான தமிழ்மொழிக்கு வித்திட்டவர் தொல்காப்பியர்
செல்வி சாரா சிவகுமாரன்
6ஆம் வகுப்பு, ரூஜ் பார்க் பொதுநிலைப் பாடசாலை, மார்க்கம்
நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
காலம்:
கனடா: சனிக்கிழமை, சூலை 18, 2026 மாலை 7.00 முதல் 09:00 வரை
இந்தியா/இலங்கை: ஞாயிற்றுக்கிழமை, சூலை 19, 2026 காலை 4.30 முதல் 6.30 வரை
Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09&omn=84627905302
Meeting ID: 361 993 2434
Passcode: tamil
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.



