“உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2026” தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்
கனடாத் தொல்காப்பிய மன்றம், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் தனது இரண்டாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்தத் திட்டமிட்டிருக்கிறது.
இம் மாநாடு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் கூட்டம் ஒக்டோபர் 27, 2025 (திங்கட்கிழமை) அன்று இரவு 8.30 (ரொறன்ரோ நேரம்) மணிக்கு இணையவழியாக நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலக நாடுகளிலிருந்து அறிஞர்கள், ஆர்வலர்கள், அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் போன்றோர் கலந்துகொண்டு இவ் விழாவைக் சிறப்புற நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். எனவே, ஆர்வமுள்ளவர்கள் இதில் தவறாது கலந்துகொண்டு தங்களின் ஆலோசனைகளையும் ஆதரவையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
நேரம்: ஒக்டோபர் 27, 2025 08:30 இரவு EST (அமெரிக்கா, கனடா)
ஒக்டோபர் 28, 2025 06.00 அதிகாலை IST (இந்தியா, இலங்கை)
ஏனைய நாடுகளில் உள்ளோர் தயவு செய்து அவரவர் நாட்டிற்குரிய நேரத்தை உரிய முறையில் கணித்துக்கொள்ளவும். நன்றி.
சூம் செயலிக் கூட்டத்திற்கான இணைப்பு:
https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09&o
Meeting ID: 361 993 2434
Passcode: tamil
மேலதிக தொடர்புகளுக்கு:
முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்
தலைவர், தொல்காப்பிய மன்றம் – கனடா
தொ. எண். 647-881-3613



