பெரியோருக்கான தொல்காப்பிய விநாடி வினா 2025

நிகழ்ச்சி அறிவித்தல் – #2

2025ஆம் ஆண்டுக்கான தொல்காப்பிய விழாவில் சிறுவருக்கும் பெரியவருக்கும் என இரண்டு பிரிவுகளில் ‘தொல்காப்பிய விநாடிவினா’ (Quiz) பல்சுவை நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான இந்தப் பிரிவுக்குத் தொல்காப்பியம் முழுமையும் பாடத்திட்டமாக அமையும். 24 வினாக்கள் போட்டியில் கேட்கப்படும். ‘வினாக் கொத்து’ வழங்கப்படமாட்டாது.

விநாடி-வினா நிகழ்ச்சி Quizizz தளம் மூலம் பல்சுவை விளையாட்டாக 2025-09-07 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 3-9 மணியளவில் தமிழ் இசைக் கலாமன்றத்தில் நடைபெறும். கட்டணம் ஏதும் இல்லை. வெற்றிபெறும் முதல் மூவருக்குப் பரிசும் ‘தொல்காப்பியத் திருவாட்டி/திருவாளர் 2025’ என்ற பட்டமும் வழங்கப்படும். பங்குபெறுவோர் அவனவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புவோர் https://forms.gle/CiRxDzKmNqJbVXmq5 இணைப்பிலோ அல்லது QR குறியீட்டின் மூலமோ செப்டம்பர் 05, 2025ஆம் நாளுக்குள் பதிவுசெய்ய வேண்டும்.
மேலதிக விவரங்களுக்கு: 647-881-3613 / 647-850-0152 / 647-709-1298

தகுதியும் விதிமுறைகளும்

  1. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்.
  2. சிறந்த இணையவசதி கொண்ட செல்பெசி (Mobile) / பலகைக்கணினி (Tab) கொண்டுவருதல்.
  3. விநாடி-வினா நடக்கும் நாள்: 2025-09-07 ஞாயிற்றுக்கிழமை மாலை.
  4. Quiziz செயலியை (App) நிறுவிக்கொள்ளுதல் (Install) வேண்டும்.
  5. இப் பட்டத்தை ஒரு முறை பெற்றவர்கள் மறுபடியும் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  6. விண்ணப்பிக்கக் கடைசி நாள் 2025-09-05

தொல்காப்பியத்தை மக்கள்மயமாக்குவோம் வாரீர்!


You may also like...