2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு

நாள்: 19, 20 செப்டம்பர், 2026

இடம்: ஸ்கார்புரோ, ரொறொன்ரோ, கனடா.

மாநாட்டிற்கான நோக்கம்

  • தொல்காப்பியத்தின் பெருமையைத் தமிழினத்தோடு பிற சமூகத்தினரும் அறியும்படிச் செய்தல்.
  • தொல்காப்பியத்தின் அனைத்துச் சிறப்புகளையும் ஒருங்கே தொகுத்தல்.
  • இளைஞர்கள் மத்தியில் “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க வேண்டும்” என்று எழும் வினாவிற்குப் பரந்த விளக்கம் கொடுத்தல்.
  • தொல்காப்பியத்தைக் கற்க-கற்பிக்க, கொண்டாட-பரவலாக்கம் செய்வதற்கான காரணங்களை முழுமையகாகத் தொகுத்தல்.
  • தொல்காப்பியத்தையும் உலகளாவியத் தொல்காப்பிய ஆய்வறிஞர்களையும் ஆய்வுகளையும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துதல்.

மாநாட்டுக் கருப்பொருள்

தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க-கற்பிக்க, கொண்டாட-பரவலாக்க வேண்டும்?

  1. அகராதியியலுக்காக
  2. அரசியலுக்காக
  3. அறத்துக்காக
  4. அறிவியலுக்காக
  5. இசைக்காக
  6. இலக்கண அறிவுக்காக
  7. இலக்கியங்கள் படைப்பதற்காக
  8. இலக்கியப் புரிதலுக்காக
  9. உயிரினங்களுக்காக
  10. உளவியலுக்காக
  11. கட்டமைப்புக்காக
  12. கலைக்காக
  13. கோட்பாடுகளுக்காக
  14. சமய, தத்துவ மரபுகளுக்காக
  15. சமூகவியலுக்காக
  16. சூழலியலுக்காக
  17. தமிழ்-தமிழர் அடையாளத்திற்காக
  18. தகவல் களஞ்சியத்திற்காக
  19. தாவரவியலுக்காக
  20. தொல்காப்பியரின் புலமைக்காக
  21. தொன்மைக்காக
  22. நாடகத்திற்காக
  23. படைப்பிலக்கியத்திற்காக
  24. பண்பாட்டுக்காக
  25. புழங்குபொருள்களுக்காக
  26. மானிடவியலுக்காக
  27. மெய்யியலுக்காக
  28. மொழி வளர்ச்சிக்காக
  29. மொழிக் கற்பித்தலுக்காக
  30. மொழியியலுக்காக
  31. வரலாற்றுக்காக
  32. வாழ்வியலுக்காக (அகம், புறம்)
  33. மரபுக்காக (நம்பிக்கை, பழக்கவழக்கம், உணவு, பிற)
    அன்ன பிற…

மேற்குறித்த வினாவுக்கு (4 செயல்களுக்கு: கற்க-கற்பிக்க, கொண்டாட-பரவலாக்க) விடையளிக்கும் வகையில் மேற்சுட்டிய 33 தலைப்புகளுள் ஒன்றிலோ அல்லது இவைபோன்றதொரு தலைப்பிலோ  தொல்காப்பியத்தின் சிறப்புகள் புலப்படுமாறு ஆய்வுக்கட்டுரை அமைதல்வேண்டும்.

கட்டுரை அதற்குரிய தரத்திலும் வடிவத்திலும்  அமைதல் வேண்டும்.

மாநாட்டுக் கருப்பொருள் தொடர்புடைய கட்டுரைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தொல்காப்பியம் குறித்துப் பொதுநிலையில் எழுதப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.  

பதிவுக் கட்டணம்: எந்தக் கட்டணமும் இல்லை.

ஆய்வுச் சுருக்கம்: 2 பக்கங்களுக்குள்

ஆய்வுக் கட்டுரை: 10-15 பக்கங்களுக்குள்.

பக்கக் கட்டமைப்பும் கோப்பும்: 1.5 வரி இடைவெளி, 12 எழுத்துரு அளவு, ஒருங்குறி (Unicode), வோர்டு (Word) கோப்பு (File), நான்கு பக்கமும் Margin 1”, கட்டுரையாளரின் பெயரும் சுருக்கமான தலைப்பும் கோப்பின் பெயராக இருக்க வேண்டும்.

ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்பக் கடைசிநாள்01-03-2026
ஆய்வுச் சுருக்கம் தெரிவுசெய்யப்பட்ட முடிவு வெளியாகும் நாள்01.04.2026
முழுக் கட்டுரை அனுப்பக் கடைசிநாள்01-06-2026
முழுக் கட்டுரை தெரிவுசெய்யப்பட்ட முடிவு வெளியாகும் நாள்01-07-2026

கட்டுரைச் சுருக்கம் மற்றும் முழுக் கட்டுரையைப் பின்வரும் இணைப்பு (Google form) அல்லது விரைவுத் துலங்கல் குறியீடு (QR) மூலம் மட்டுமே பதிவுசெய்து சமர்ப்பிக்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்புதல் கூடாது.

https://forms.gle/QN63VR5v2KJAH5VA9

மேலும் விவரங்களுக்கு:

தலைவர்
+1 (647) 881-3613
செயலாளர்
+1 (647) 850-0152
ஒருங்கிணைப்பாளர்
+1 (437) 979-3006

conference@tolkappiyam.ca

You may also like...