தமிழ்த் திறன் போட்டிகள் – 2026
எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள இரண்டாவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன.
இப்போட்டிகள் யாவும் 10-மே-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் இடம்பெறும்.
இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இரண்டாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின்போது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு (இளமழலை [JK], முதுமழலை [SK]) 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன.
மேலும் தொல்காப்பிய நூற்பா ஓதுதல் போட்டி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் (Middle school வகுப்பு 06-08) மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் (High school வகுப்பு 09-12) என இரு பிரிவுகளில் நடத்தப்படும்.
இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் படிவத்தினை நிரப்பிய பின்னர், உரிய தொகையினை comp@tolkappiyam.ca என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு e-transfer மூலம் அனுப்பி வையுங்கள். E-transfer செய்யும்போது, தகவற் பகுதியில் (Message) மாணவரின் பெயர் மற்றும் கல்வி கற்கும் தரம் ஆகியவற்றைக் குறிப்பிடவும்.
ஒவ்வொரு போட்டிக்குமான உள்ளடக்கங்களைக் கீழே உள்ள அட்டவணையில் அந்தந்தப் போட்டிகளின் இணைப்பில் தரவிறக்கிக் கொள்ளலாம்.
| பிரிவு | வகுப்பு | பிறந்த ஆண்டு | போட்டிகள் | |||
| 1 | JK | 2020 இற்குப் பின் | பேச்சு | படம் – கூறுதல் | ||
| 2 | SK | 2020 | பேச்சு | படம் – கூறுதல் | ||
| 3 | Gr – 1 | 2019 | பேச்சு | படம் – கூறுதல் | படம் – எழுதுதல் | |
| 4 | Gr – 2 | 2018 | பேச்சு | படம் – கூறுதல் | படம் – எழுதுதல் | |
| 5 | Gr – 3 | 2017 | பேச்சு | படம் – எழுதுதல் | வினாவிடை | |
| 6 | Gr – 4 | 2016 | பேச்சு | படம் – எழுதுதல் | வினாவிடை | |
| 7 | Gr – 5 | 2015 | பேச்சு | படம் – எழுதுதல் | வினாவிடை | |
| 8 | Gr – 6 | 2014 | பேச்சு | படம் – எழுதுதல் | வினாவிடை | தொல்காப்பிய நூற்பா ஓதுதல் |
| 9 | Gr – 7 | 2013 | பேச்சு | படம் – எழுதுதல் | வினாவிடை | |
| 10 | Gr – 8 | 2012 | பேச்சு | படம் – எழுதுதல் | வினாவிடை | |
| 11 | Gr – 9-12 | 2008 – 2011 | காணொளி ஒப்படை | படம் – எழுதுதல் | வினாவிடை | தொல்காப்பிய நூற்பா ஓதுதல் |
ஒரு போட்டியில் பங்கேற்பதற்குரிய கட்டணம் $20.00
இரு போட்டிகளில் பங்கேற்பதற்குரிய கட்டணம் $30.00
மூன்று போட்டிகளில் பங்கேற்பதற்குரிய கட்டணம் $40.00
நான்கு போட்டிகளில் பங்கேற்பதற்குரிய கட்டணம் $50.00
விண்ணப்பங்கள் 15/04/2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவத்தினை உரியகாலப்பகுதிக்குள் நிரப்பி அனுப்பாத மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பப் படிவத்தில் தரப்பட்டிருக்கும் மின்னஞ்சல்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சில போட்டிகளில் மேலதிக வினாக்களும் கேட்கப்படும். முதல் 3 இடங்களை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்படும்போது மட்டுமே அவற்றின் புள்ளிகள் கருத்திற் கொள்ளப்படும்.
ஒரு போட்டியில்;
– முதல் இடத்திற்கு இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், 2ஆம் இடம் இல்லை, 3ஆம் இடம் உண்டு
– முதல் இடத்திற்கு இருவரிற்கு மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் 2ஆம் 3ஆம் இடங்கள் இல்லை
– இரண்டாம் இடத்திற்கு ஒருவரிற்கு மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் 3ஆம் இடம் இல்லை
மேலதிக விபரங்களுக்கு: 647-881-3613 / 647-850-0152



