மாதாந்தக் கருத்தரங்கு – மார்ச் 2026
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)
நெறியாளர்: திருமதி கலாதேவி அரியராசா, முதுகலைத் தமிழ்
தொல்காப்பியத்தில் இசைக்கருவிகள் – தொன்மையும் தொடர்ச்சியும்
-கலாநிதி பிரியதர்ஷினி ஜெதீஸ்வரன்
சிரேஷ்ட விரிவுரையாளர், இசைத்துறை
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
சங்க இலக்கியத்தின் நுழைவாயில் தொல்காப்பியம்
திருமதி புவனா கருணாகரன்
முதுகலைத் தமிழ், தமிழ்ப் பல்கலைக்கழகம், அமெரிக்கா
ஏன் சிறுவர்கள் தொல்காப்பியம் கற்க வேண்டும்?
செல்வி அகரா றமணன்
7ஆம் வகுப்பு, ப்ளூர்லியா நடுநிலைப் பள்ளி, கனடா.
நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
காலம்:
கனடா: சனிக்கிழமை, மார்ச் 14, 2026 மாலை 7.00 முதல் 09:00 வரை
இந்தியா/இலங்கை: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15, 2026 காலை 4.30 முதல் 6.30 வரை
Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09&omn=84627905302
Meeting ID: 361 993 2434
Passcode: tamil
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.




