மாதாந்தக் கருத்தரங்கு – டிசம்பர் 2025
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)
நெறியாளர்: திருமதி தில்லைராணி பாலேஸ்வரன்
தொல்காப்பிய ஆய்வுகள்: வரலாறும் வளர்ச்சியும்
– பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன்
மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
தமிழர் முதன் முதலில் இழந்த இடங்கள்
செல்வி அஞ்சுகா சிவஜெயந்தன்
9ஆம் வகுப்பு, பாதர் மைக்கேல் மெக்கிவேனி பள்ளி, கனடா.
நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
நேரம்: பிற்பகல் 7.00 மணி முதல் – 09:00 மணி வரை (கனடா நேரம்),
Join Zoom Meeting:
Meeting ID: 361 993 2434
Passcode: tamil
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.




