மாதாந்தக் கருத்தரங்கு – ஒக்ரோபர் 2025
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)
நெறியாளர்: திருமதி சுவந்தி சங்கர், முதுகலைத் தமிழ்
தொல்காப்பியம் காட்டும் இசை, நாட்டிய மரபுகளின் நீட்சி
– முனைவர் செ. கற்பகம்
பேராசிரியர், இசைத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு.
உழைப்பே உயர்வு தரும்
செல்வி தணிகா மயூரன்
6ஆம் வகுப்பு, கிளாமோர்கன் பள்ளி, கனடா.
தொல்காப்பியத்தின் பெருமை
செல்வி சாரா சிவகுமாரன்
6ம் வகுப்பு, ரூச்பார்க் பள்ளி, கனடா.
நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
நாள்: சனிக்கிழமை, ஒக்ரோபர் 25, 2025
நேரம்: பிற்பகல் 7.00 மணி முதல் – 09:00 மணி வரை (கனடா நேரம்)
Join Zoom Meeting:
Meeting ID: 361 993 2434
Passcode: tamil
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.




