சிறுவருக்கான தொல்காப்பிய விநாடி-வினா 2025
நிகழ்ச்சி அறிவித்தல் – #1

2025ஆம் ஆண்டுக்கான தொல்காப்பிய விழாவில் சிறுவருக்கும் பெரியவருக்கும் என இரண்டு பிரிவுகளில் ‘தொல்காப்பிய விநாடிவினா’ (Quiz) பல்சுவை நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவருக்கான முதல் பிரிவில் தொல்காப்பியம் பற்றியும் தொல்காப்பியத்திலிருந்தும் (எழுத்து, சொல், பொருள்), அடிப்படைத் தமிழ் இலக்கணத்திலிருந்தும் 24 வினாக்கள் கேட்கப்படும். ‘வினா கொத்து’ இணைக்கப்பட்டுள்ளது.
விநாடி-வினா நிகழ்ச்சி Quizizz தளம் மூலம் பல்சுவை விளையாட்டாக 2025-09-07 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை தமிழ் இசைக் கலாமன்றத்தில் நடைபெறும். கட்டணம் ஏதும் இல்லை.
வெற்றிபெறும் முதல் மூவருக்குப் பரிசும் ‘தொல்காப்பியச் செல்வன்/செல்வி 2025’ என்ற பட்டமும் வழங்கப்படும். பங்குபெறுவோர் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றிபெறும் முதல் மூவர் தொல்காப்பிய மன்றத்தின் மாணவர் பாசறையில் 5 ஆண்டுகாலத்திற்கு மதிப்புறு உறுப்பினராகக் கட்டணமின்றிச் சேர்க்கப்படுவர்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புவோர் https://forms.gle/qPF3GTniRMRy3gPeA இணைப்பிலோ அல்லது QR குறியீட்டின் மூலமோ செப்டம்பர் 05, 2025ஆம் நாளுக்குள் பதிவுசெய்ய வேண்டும். பெரியவருக்கான அறிவித்தல் பிறகு வெளியிடப்படும். மேலதிக விவரங்களுக்கு: 647-881-3613 / 647-850-0152 / 647-709-1298
தகுதியும் விதிமுறைகளும்
- தகுதி: 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை (செப்டம்பர் 2025)
- சிறந்த இணையவசதி கொண்ட செல்பேசி (Mobile) / பலகைக்கணினி (Tab) கொண்டுவருதல்.
- விநாடி-வினா நடக்கும் நாள்: 2025-09-07 ஞாயிற்றுக்கிழமை மாலை.
- Quiziz செயலியை (App) நிறுவிக்கொள்ளுதல் (Install) வேண்டும்.
- பெற்றோர் அல்லது ஆசிரியர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கக் கடைசி நாள் 2025-09-05
இளையோரிடமும் தொல்காப்பியத்தின் பெருமையை எடுத்துச்செல்வோம் வாரீர்!



